Home /News /coimbatore /

போதை மாத்திரை கொடுக்க மறுத்த மெடிக்கல்ஸ் கடைக்காரருக்கு கத்திக்குத்து - கோவையில் இளைஞர்கள் அட்டூழியம்..

போதை மாத்திரை கொடுக்க மறுத்த மெடிக்கல்ஸ் கடைக்காரருக்கு கத்திக்குத்து - கோவையில் இளைஞர்கள் அட்டூழியம்..

மருந்துக்கடை உரிமையாளர் மோகன்குமார்

மருந்துக்கடை உரிமையாளர் மோகன்குமார்

Coimbatore Crime News : கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள மருந்து கடை ஒன்றில் போதை மாத்திரை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அக்கடையின் உரிமையாளரை கத்தியால் குத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் நேற்றிரவு போதை மாத்திரை கொடுக்க மறுத்த மருந்துக்கடை உரிமையாளர் மோகன்குமார் என்பவரை இளைஞர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஸ்ரீ கணபதி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வருபவர் மோகன் குமார். இவர் நேற்று இரவு 10.30 மணிக்கு கடையை  பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பிய போது ஆட்டோவில் வந்த  கும்பல் மயக்கம் கொடுக்கும் போதை மாத்திரைகளைக் கேட்டுள்ளனர். ஆனால் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என்று மோகன்குமார் கூறியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருந்துக்கடை உரிமையாளர் மோகன்குமாரை தாக்கியுள்ளார். இதில் கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில் அவரை அப்படியே விட்டு விட்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பினர். இந்த சம்பவத்திற்கு முன்பே மோகன்குமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசியபடி இருந்தார். இணைப்பை துண்டிக்காமல்  அப்படியே வைத்திருந்ததால் இந்த சம்பவம் குறித்து அறிந்த அவர் உடனடியாக குடும்ப நண்பர்களுக்கு தகவல்  தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து மோகன்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ | பாமாயில் உற்பத்தியை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அங்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும்  இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரில் கஞ்சா ,போதை மாத்திரை விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மருந்துக்கடை உரிமையாளர் மோகன்குமார்


இதனிடையே  போதை மாத்திரை கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர்கள் மருந்து கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Coimbatore, Crime News, Ganja

அடுத்த செய்தி