ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பொங்கல் பண்டிகை : கோவையில் இருமடங்கான பூக்களின் விலை!

பொங்கல் பண்டிகை : கோவையில் இருமடங்கான பூக்களின் விலை!

கோவை பூ சந்தை

கோவை பூ சந்தை

Coimbatore Flower Rate | பொங்கல் பண்டிகை முடியும் வரை இந்த விலை உயர்வு இருக்கும் எனவும் அது பின்னர் வழக்கமான விலைக்கு பூக்கள் விலை குறைந்து விடும் எனவும் வியாபாரிகள் நம்பிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  பூக்களின் விலை  அதிகரித்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில் கோவையில்  பூ மார்க்கெட் பகுதியில் பூக்கள் வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் பண்டிகைக்காக பூக்களை வாங்கி செல்கின்றனர். கடந்த சில தினங்களாக நிலவும் கடும் பனி காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதாகவும், இதன் காரணமாக பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொது மக்கள் கடந்த வாரம் 10 ரூபாய்க்கு விற்ற தாமரை 20 ரூபாய்க்கு விற்க படுவதாகவும், 300 ரூபாய்க்கு விற்ற அரளி 400 ரூபாய்கு விற்கப்படுவதாகவும்,60 ரூபாய்க்கு விற்ற செவ்வந்தி 140 ரூபாயக்கு விற்கபடுவதாகவும், 1500 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெளியூர்களிலேயே 2500 ரூபாய்க்கு மேலாக மல்லிகை பூ இருக்கும் நிலையில், நிலக்கோட்டை, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து அவற்றை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பூ விலை அதிகமாக இருப்பதால் பூக்களை குறைவாகவே வாங்கி செல்வதாகவும், கடைக்கு வந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகை முடியும் வரை இந்த விலை உயர்வு இருக்கும் எனவும் அது பின்னர் வழக்கமான விலைக்கு பூக்கள் விலை குறைந்து விடும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் .

First published:

Tags: Coimbatore, Local News, Pongal 2023