ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவையில் வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கிய காட்டுயானை

கோவையில் வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கிய காட்டுயானை

காட்டு யானை தாக்கிய பெண்

காட்டு யானை தாக்கிய பெண்

Coimbatore news: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதால் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படை  பயிற்சி வளாகத்திற்குள்  புகுந்த காட்டு யானை நடை பயிற்சியில் இருந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில்  மத்திய ரிசர்வ் படையின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் எப்போதும் யானை நடமாட்டம் இருக்கும்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில்  பயிற்சி வளாக குடியிருப்பில் உள்ள ராதிகா என்பவர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை,  ராதிகாவை தாக்கியது. இதில்  தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்த ராதிகாவை அங்குள்ளவர்கள் மீட்டு வளாகத்தில் உள்ள CRPF மருத்துவமனையில்  முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

இதையும் படிங்க:  பொள்ளாச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம்... பசுமாட்டை மிதித்து கொன்ற கொடூரம்!

பின்னர் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனிடையே மத்திய ரிசர்வ் படை வளாகத்திற்குள் யானை புகுந்த தகவல் வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர்   காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் மத்திய ரிசர்வ் படை ஜஜியின் மெய் காவலர் மோகனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Arunkumar A
First published:

Tags: Coimbatore, Elephant