முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை நீதிமன்ற வளாக கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது

கோவை நீதிமன்ற வளாக கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது

கோவை ரவுடி கொலை வழக்கு

கோவை ரவுடி கொலை வழக்கு

Coimbatore Murder Case | கொலையாளிக்கு உதவி செய்த மேலும் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த ரவுடி கோகுல், ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் நண்பரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொலையாளிகளை 8 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

கொலையாளிகள் கோத்தகிரியில் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்று 7 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை கோவைக்கு வாகனம் மூலம் அழைத்து வந்தனர். அப்போது, கவுதம், ஜோஷ்வா ஆகிய இரண்டு பேர் தப்பியோட முயன்றதால், அவர்களை காலில் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்த காவல்துறையினர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் தற்போது மேலும் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கொடுத்தது, குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்து பேரிடமும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Coimbatore, Crime News, Local News