போலந்து உட்பட பல்வேறு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்த கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஏ.ஜி புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு கோவை வந்த அவர், கோவையில கம்ப்யூட்டர் தொடர்பான தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் சந்திரமோகன் மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பிய நிலையில், இதற்காக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டாடாபாத் பகுதியை சேர்ந்த SHEA இமிகிரேசன் சர்வீஸ் என்ற நிறுவனத்தை அணுகினார். இதன் உரிமையாளர்களான அருண் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் போலந்து நாட்டில் கம்ப்யூட்டர் தொடர்பான வேலைவாய்ப்பு இருக்கிறது எனவும், அங்கே செல்ல ரூ.4.50 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளனர். முன்பணமாக சந்திர மோகனிடம் இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக் கொண்ட அவர்கள், இரண்டு ஆண்டுகளாக வேலை வாங்கித் தரவில்லை எனக்கூறப்படுகின்றது.
சந்திரமோகன் அவர்களை அணுகி வேலை வாங்கி கொடுங்கள் அல்லது பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை தர மறுத்து தம்பதி, சந்திரமோகனை மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக சந்திரமோகன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹேமலதாவை தேடி வருகின்றனர். அருண் மற்றும் ஹேமலதா ஆகியோர் மேலும் பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. அது தொடர்பான பட்டியலை எடுத்துள்ள போலீசார் அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Crime News, Local News