ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பெங்காலி மொழியில் வைக்கப்பட்ட மாநகராட்சி பேனர் - கோவையில் புதிய சர்ச்சை!

பெங்காலி மொழியில் வைக்கப்பட்ட மாநகராட்சி பேனர் - கோவையில் புதிய சர்ச்சை!

சர்ச்சையான பேனர்

சர்ச்சையான பேனர்

Coimbatore | வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பெங்காலி மொழியில் இடம் பெற்றிருப்பதாக தகவல்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் பெங்காலி மொழி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் மொழி பிரச்சனை உருவெடுத்து வரும் நிலையில், கோவையில் வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கோவை காந்தி பார்க் பகுதியில் மாநகராட்சி சார்பில், பொது இடத்தில் குப்பையை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனரில் தமிழ் மொழியில் மேலேயும், பெங்காலி மொழியில் கீழேயும் எழுதப்பட்டிருந்தது.

இதனை கண்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநிலத்தவர்கள் அப்பகுதியில் அதிகம் வசிப்பதால் பெங்காலி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த பேனர் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.

First published:

Tags: Banners, Coimbatore, Local News