ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஜமேஷா முபினின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன? என்.ஐ.ஏ எப்ஐஆர் தகவல்கள்...

ஜமேஷா முபினின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன? என்.ஐ.ஏ எப்ஐஆர் தகவல்கள்...

என்.ஐ.ஏ. விசாரணை

என்.ஐ.ஏ. விசாரணை

Coimbatore car cylinder blast | சங்கமேஸ்வரர் கோயில் பூசாரி சுந்தரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும்,  விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் விக்னேஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதகாவும், தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் முதல் தகவல் அறிக்கையில், பலியான ஜமீஷா முபினின் வீட்டில் இருந்து ஜிகாத் தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, வியாழக்கிழமை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது, இதையடுத்து பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜமீஷா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதில் வெடிகுண்டு தயார் செய்வதற்கான பொட்டாசியம் நைட்ரேட் மற்றும்  ரெட் பாஸ்பரஸ் உள்ளிட்ட  வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் வயர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களும், ஜிகாத் கொள்கைகள் தொடர்பான புத்தகங்களும் கிடைத்துள்ளன.

  இதையும் படிங்க : கோவையில் பாஜக பந்த் நடத்தினால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  மேலும் சங்கமேஸ்வரர் கோயில் பூசாரி சுந்தரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும்,  விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் விக்னேஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதகாவும், தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலானாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Bomb blast, Coimbatore, Crime News, Tamilnadu