ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

காரில் ஆணிகள்.. வெடிகுண்டுக்கான பொருட்கள்.. கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் திடுக்கிடும் தகவல்கள் சொன்ன டிஜிபி!

காரில் ஆணிகள்.. வெடிகுண்டுக்கான பொருட்கள்.. கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் திடுக்கிடும் தகவல்கள் சொன்ன டிஜிபி!

சைலேந்திர பாபு, ஜமோசா முபின்

சைலேந்திர பாபு, ஜமோசா முபின்

வெடி பொருட்களை காரில் எங்கேயா கொண்டு சென்று இருக்கின்றனர். வருங்காலத்தில் ஏதாவது திட்டமிட்டு இருக்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில், உயிரிழந்த நபரின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் கண்டறியப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

  கோவையில் இன்று நடந்த கார் சிலிண்டர் வெடித்த குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், “கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த நபரின் பெயர் ஜமேசா முபின். அவர் அந்த காரில் வெடிபொருட்கள் ஏத்தி சென்றுள்ளார். அருகில் செக்போஸ்ட் இருந்ததால் காரை நிறுத்திவிட்டு ஓட முயற்சிக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் , வெடிமருத்து சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” என தெரிவித்தார்.

  மேலும் அந்த காரில் ஆணிகள்,கோலிகுண்டு போன்றவை இருந்தது தடயறிவியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும் அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

  இது குறித்து விசாரணை செய்த கோவை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு 12 மணி நேரத்திலேயே குற்றவாளி யார் என்பதை தனிப்படை கண்டறிந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் அந்த கார் இதுவரை 9 பேரிடம் கைமாறியுள்ளது எனவும் சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பதையும் துரிதமாக செயல்பட்டு தனிப்படையினர் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.

  மேலும் இறந்தவர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜமோசா முபின் இஞ்சினியரிங் படித்துள்ளார், அவர் எந்த அமைப்பிலும் இருப்பதாக தெரியவில்லை. என்.ஐ.ஏ அவரை விசாரித்து இருந்தாலும் அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தினார்.மேலும் இறந்தவருடன் தொடர்பில் இருந்த நபர்களை விசாரித்து வருகின்றோம் என தெரிவித்தார்.

  மேலும் அந்த வெடி பொருட்களை காரில் எங்கேயா கொண்டு சென்று இருக்கின்றனர். வருங்காலத்தில் ஏதாவது திட்டமிட்டு இருக்கலாம். வீட்டில் கைபற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் நிச்சயம் அவர் தற்கொலை படையாக இருக்க வாய்ப்பில்லை என கூறினார்.

  கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்தி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Coimbatore, Sylendra Babu