ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு... ஜமீஷா முபீன் வீட்டில் ஐஎஸ் கொடியின் வடிவம் - சந்தேகத்திற்குரிய ஆவணத்தை கைப்பற்றிய காவல்துறை

கோவை கார் வெடிப்பு... ஜமீஷா முபீன் வீட்டில் ஐஎஸ் கொடியின் வடிவம் - சந்தேகத்திற்குரிய ஆவணத்தை கைப்பற்றிய காவல்துறை

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

Coimbatore | இன்று காலையில் ஜமீசா முபீன் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது ஐஎஸ் கொடியின் வடிவம் கிடைத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமீஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமீஷா முபீன் வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடிபொருளுக்கான ரசாயனம் உள்பட 109 வகையான பொருட்கள் கைப்பற்றினர்.

  ஜமீஷா முபினுக்கு உடந்தையாக செயல்பட்டதாக மேலும் 6 பேரை போலீசார் உபா சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை , தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரும் , கோவை மாநகர போலீசாரம் தனித்தனியாக இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் அனுதாபிகள், ஆதரவாளர்கள் என 900 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதிலிருந்து தற்போது வரை 137 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவையில் நேற்று மட்டும் 18 வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் அனுதாபிகள், ஆதரவாளர்கள், சந்தேகத்திற்கு இடமானவர் என 900 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

  இந்த பட்டியல் அடிப்படையில் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. இவர்களின் வீடுகளையும் சோதனையிடவும், இவர்களை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  Also see... கோவை கார் சிலிண்டர் வெடிப்பு... 5 பேரை கைது செய்த போலீஸ்

  இந்நிலையில் இன்று காலையில் ஜமீசா முபீன் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது ஐஎஸ் கொடியின் வடிவம் கிடைத்துள்ளது. அதில் வன்முறையை தூண்டும் விதத்தில் சிலேட்டில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சோதனையின் போது சில சந்தேகத்திறகுரிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக அந்த வடிவத்தில் ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் எழுத்தப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bomb blast, Car, Coimbatore