ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவம்

Coimbatore | கோவையில் கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்பாக முபீன் உடலில் உள்ள முடிகளை சேவ் செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கார் வெடிப்பு  ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோவை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் , போலீசாரும் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் முபீன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய ஆவணங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது. மேலும் ஜிகாத் குறித்தும் ஹதீஸ் குறித்தும் எழுதப்பட்ட குறிப்புகளும் , ஜிகாத் யாருக்கு கடமை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் சிலேட்டில் ஐ. எஸ் அமைப்பிற்கான வாசகங்கள் அரபுமொழியில்  எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கோவை மாநகர போலீசார் கைப்பற்றிய இந்த ஆவணங்களின் ஒரு சில பகுதிகளை நேற்று நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் ஒளிபரப்பியது.

இந்நிலையில் முபீன் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர் அவரது உடலை முழுவதும் சேவ் செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கமாக தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடும் அடிப்படை வாத சித்தாந்தங்கள் நபர்கள் உடலில் உள்ள ரோமங்களை அகற்றிவிட்டு தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம் என்பதும் , அந்த நடைமுறையை முபீனும் பின்பற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Also see... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? - விவரம் இதோ

சிசிடிவி காட்சிகளில் இருந்த உடைகளும், கார் வெடிப்பின் போது இருந்த உடைகளும் வேறு வேறு என்பதும் , உடலை சேவ் செய்து குளித்து ,வேறு உடைமாற்றி தொழுகை செய்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் முபீனுக்கு வழிகாட்டியாக இருந்தது யார் என்பது குறித்தும் விசாரணையானது நடைபெற்று வருகின்றது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Attack, Blast, Car, Coimbatore, Suicide