ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

2019ல் NIA விசாரணை.. பழைய துணி பிஸினஸ்.. கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தவரின் பின்னணி!

2019ல் NIA விசாரணை.. பழைய துணி பிஸினஸ்.. கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தவரின் பின்னணி!

ஜமோசா முபின்

ஜமோசா முபின்

இவர் உக்கடம் ஜி.எம் நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை உக்கடம் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபரின் பெயர் ஜமேசா முபின் என்பதும் அவர் மீது 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

  கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக இன்று அதிகாலை 4.15 மணிக்கு மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சப்தம் கேட்ட பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் ,காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது.

  சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

  இந்நிலையில் உயிரிழந்தவர் பெயர் ஜமோசா முபின் என்பது தெரிய வந்துள்ளது. இவர் உக்கடம் ஜி.எம் நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவரை 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது விவரங்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Coimbatore