ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு.. முபினின் இதயத்தை துளைத்த ஆணி.. வெளியான ஷாக் தகவல்கள்!

கோவை கார் வெடிப்பு.. முபினின் இதயத்தை துளைத்த ஆணி.. வெளியான ஷாக் தகவல்கள்!

உயிரிழந்த ஜமோசா முபின்

உயிரிழந்த ஜமோசா முபின்

சிலிண்டர் வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஜமேஷா முபினின் காதுகள், மூக்கு, வாய் வழியாக ரத்தம் வழிந்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உடலில் இருந்து 7 ஆணிகள் அகற்றப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  கோவையில் கடந்த 23 ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் சார்பில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 27ம் தேதி என்.ஐ.ஏ வழக்கு பதிந்தது.

  இந்த வழக்கு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

  சிலிண்டர் வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஜமேஷா முபினின் காதுகள், மூக்கு, வாய் வழியாக ரத்தம் வழிந்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவரது உடலில் ஆங்காங்கே 7 ஆணிகள் குத்தி கிடந்ததாகவும் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

  2 அங்குலம் அளவு கொண்ட இந்த ஆணிகளில் ஒன்று ஜமேஷா முபினின் இதயத்தை துளைத்து உள்ளே இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

  ALSO READ | நிர்வாண மாடலிங்.. இன்ஸ்டாவில் பழக்கம்.. இளம்பெண்ணை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இயக்குநர்.!

  மேலும், அவர் தீ விபத்தில் பெரிய அளவில் கருகவில்லை என்றும், உடலின் பாகங்களும் சிதறவில்லை என கூறிய போலீசார், கார் வெடித்தவுடன் உள்ளே இருந்த அவர் தூக்கி எறியப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் மூலம் தெரியவந்துள்ளது என தகவல் தெரிவித்தனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Kovai bomb blast