ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்தாரா ஜமேஷா முபின்?

இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்தாரா ஜமேஷா முபின்?

வெளியான சிசிடிவி காட்சி

வெளியான சிசிடிவி காட்சி

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்மந்தபட்டவர்களுடன், முபீன் தொடர்பில் இருந்தார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

    இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளி அம்ஜத் அலியை போலி ஆவணங்கள் மூலம் ஜமேஷா முபின் சந்தித்திருக்கலாம் என என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிறு அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சனிக்கிழமை இரவு  ஜமேசா முபீனுடன், 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள்  தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

    தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, ஜமேசா முபீனின் நண்பர்களான உக்கடம் கோட்டை மேடு ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை கைது செய்தது.

    ALSO READ | மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை.. அலறியடித்து ஓடிய செவிலியர்கள்- முன்விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்

    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கைதானவர்களில் மூவர் சிசிடிவியில் இருந்தவர்கள் என்றார். கைதான சிலர் கேரளா சென்று வந்ததும் தெரியவந்துள்ளதாக பாலகிருஷ்ணன் தெவித்தார்.

    மேலும், கைது செய்யப்பட்ட முகமது தல்கா, தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவரும், கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பாட்ஷாவின் உறவினர் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

    இதனிடையே,  இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்மந்தபட்டவர்களுடன், முபீன் தொடர்பில் இருந்தார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.  கேரளாவின்  திருச்சூர் மாவட்டம் வியூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளஅம்ஜத் அலியை முபினுல் ஹக் என்ற பெயரில் ஜமேஷா முபீன் சந்தித்தாரா என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    2020ஆம் ஆண்டில் முபினுல் ஹக் என்ற பெயரில் கேரளாவை சேர்ந்தவர் என ஆவணம் தரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Coimbatore, Crime News, NIA