ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்கள் பேசிகொண்ட பரபரப்பு ஆடியோ வெளியீடு!

கோவை கார் வெடிப்பு சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்கள் பேசிகொண்ட பரபரப்பு ஆடியோ வெளியீடு!

கோவை ஆடியோ

கோவை ஆடியோ

ஜமீஷா முபினுக்கு பெரொஷ், நவாஸ், ரியாஸ் ஆகிய மூவரும் வீட்டை காலி செய்து கொடுக்கவே சென்றுள்ளதாக இந்த ஆடியோ பதிவுகள் மூலம் தெரியவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore | Tamil Nadu

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யபட்டுள்ள பெரோஸ் மற்றும் ரியாஸ் ஆகியோர் பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யபட்டுள்ள பெரோஷ் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர்  இடையிலான செல்போன் உரையாடலும், ரியாஸ் மற்றும் அவரது தாயார் ஜூனைதா பேகம் இடையிலான செல்போன் உரையாடலும்  வெளியாகியுள்ளது.

தனது மகன்கள் பெரோஷ், நிவாஸ் ஆகியோரை முபின் வீட்டை காலி செய்ய அனுப்பி வைத்ததாக பெரோஸ், நவாஸ் ஆகியோரின் தாயார் மைமுனாபேகம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பெரோஸ்  தனது நண்பர்  ரியாஸையும் அழைக்கும் செல்போன் ஆடியோ பதிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பெரோஷ், ரியாஸை வீடு காலி செய்ய அழைப்பதும்,  வர மறுக்கும் ரியாஸை ஒரு நிமிடம் வந்துட்டு போ என்று சொல்லி அழைப்பதும் பதிவாகியுள்ளது.

மற்றொரு ஆடியோவில் ரியாசின் தாயார் ஜூனைதா பேகம் அழைக்கும் போது வீடு காலி செய்ய வந்திருப்பதாக ரியாஸ்  சொல்கின்றார். மற்றொரு அழைப்பின் முபின் வீட்டில் வீடு காலி செய்து கொண்டு இருப்பதாகவும் சீக்கிரம் வந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த ஆடியோ பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜமீஷா முபினுக்கு பெரொஷ், நவாஸ், ரியாஸ் ஆகிய மூவரும் வீட்டை காலி செய்து கொடுக்கவே சென்றுள்ளதாக இந்த ஆடியோ பதிவுகள் மூலம் தெரியவருகிறது.

Published by:Anupriyam K
First published:

Tags: Coimbatore