ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல்... என்ஐஏ அதிகாரிகள் தகவல்...

கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல்... என்ஐஏ அதிகாரிகள் தகவல்...

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

NIA | ஜமேஷா  மூபின் கோட்டை ஈஸ்வரன் கோயில், கோனியம்மன் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில் உட்பட 6 கோயில்களை நோட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சில இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.

  கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமீஷா முபீன்  என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமீஷா முபீன்  வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடிபொருளுக்கான ரசாயனம்  உள்பட 109 வகையான பொருட்கள் கைப்பற்றினர்.

  ஜமேஷா முபினுக்கு உடந்தையாக செயல்பட்டதாக மேலும் 6 பேரை போலீசார் உபா சட்டத்தில் கைது செய்துள்ளனர்.  இதனை தொடர்ந்து இந்த வழக்கை , தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

  இதையும் படிங்க : சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் போக முடியுமா? - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கலகல பேட்டி

  இந்நிலையில்,  கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  ஜமேஷா  மூபின் கோட்டை ஈஸ்வரன் கோயில், கோனியம்மன் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில் உட்பட 6 கோயில்களை நோட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அதிக திறன் கொண்ட ரசாயனம்  கைப்பற்றப்பட்ட நிலையில், அவை எப்படி கிடைத்தது என்றும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

  டெட்டனேட்டர்கள் தயாரிப்பதற்கும், ஜெலட்டின் குச்சி வெடிக்க வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் ரசாயனம் என்பதால் வேறு தாக்குதல் திட்டங்கள் ஏதேனும் திட்டமிட்டுள்ளார்களா எனவும் விசாரணை நடைபெறுகிறது. தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு  ஆதரவான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

  இதையும் படிங்க : ஆளுநருக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் திமுக.. கூட்டணி கட்சிகளை திரட்டி குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முடிவு

  இதனிடையே, உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். முகமது உசேன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது பெற்றோரிடம் விசாரணை நடைபெற்றது.

  இதேப்போல்  திருச்சி விமான நிலையம் அருகே, ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவரது வீட்டில், தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் என, 25க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், நான்கு சிம்கார்டுகள், ஒரு செல்போன் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Kovai bomb blast, NIA