ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு சம்பவம் - கைதான 5 பேர் வீடுகளில் போலீஸார் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் - கைதான 5 பேர் வீடுகளில் போலீஸார் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 5 பேரையும் அவர்களது வீடுகளுக்கு தனி தனியாக  அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் காவலில் உள்ள ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் , அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றும்  சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்  தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்  முதலில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை காவலில் எடுத்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக அவர்களிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 5 பேரையும் அவர்களது வீடுகளுக்கு தனி தனியாக  அழைத்துச் சென்ற போலீசார், அவர்களின்  வீடுகளில் சோதனையிட்டனர். பின்னர் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் எங்கு இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களை அந்த பகுதிகளுக்கே அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Also Read:  சிறுமியின் தலையை துண்டித்து பூஜை - நள்ளிரவில் மயானத்தில் மாந்திரீகம் - மந்திரவாதிகளின் அட்டூழியம்

பின்னர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு அவர்களை மீண்டும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இன்று மாலை வரை 5 பேரிடமும் விசாரணை நடைபெற உள்ள நிலையில் மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருக்கின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Tamil News, Tamilnadu