ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு வழக்கு.. 6-வதாக கைதான நபருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

கோவை கார் வெடிப்பு வழக்கு.. 6-வதாக கைதான நபருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

கார் வெடிப்பு வழக்கு

கார் வெடிப்பு வழக்கு

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

    கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில்  ஆறாவதாக கைதான அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த ஐந்து பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான்  என்பவரை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக  அழைத்து வந்தனர்.அதனை தொடர்ந்து  நடுவர் நீதிமன்றம் 5ல் நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க  உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அப்சர்கானை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் : ஜெரால்ட் (கோவை)

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Car, Coimbatore, Tamil News