முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் பைக் மீது கார் மோதிய விபத்து : 5 மாத குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

கோவையில் பைக் மீது கார் மோதிய விபத்து : 5 மாத குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

பைக் மீது மோதிய கார்

பைக் மீது மோதிய கார்

Coimabtore accident | விபத்தில் 5 மாத குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் வந்த தம்பதியினரை அதிவேகமாக வந்த கார் மோதிவிட்டு சென்ற சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை கணபதி பகுதியில் இருந்து மணிகாராம்பாளையம் பகுதிக்கு தம்பதியினர் தனது இருசக்கர வாகனத்தில் தனது 5 வயது மற்றும் 5 மாத குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது மணிகாரம் பாளையம் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த மாருதி கார் பைக் மீது வேகமாக மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

ஆனால், விபத்து ஏற்படுத்தியதை கூட பொருட்படுத்தாத அந்த கார் அதிவேகமாக சென்றது. இதில், 4 பேரும் படுகாயங்களுடன் தவித்து கொண்டிருந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 4 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரின் உரிமையாளரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பைக்கை இடித்து விட்டு கார் நிற்காமல் சென்ற பதைபதைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர்: வைரப்பெருமாள், கோயம்புத்தூர்.

First published:

Tags: Accident, CCTV, Coimbatore, Local News