முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் கார் மோதியதால் வாக்குவாதம்... பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த டாக்சி டிரைவரால் பரபரப்பு!

கோவையில் கார் மோதியதால் வாக்குவாதம்... பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த டாக்சி டிரைவரால் பரபரப்பு!

கார் ஓட்டுநர்

கார் ஓட்டுநர்

Coimbatore car accident issue | நடுரோட்டில் காரை டாக்சி மீது இடித்த ஓட்டுநர், டாக்சி ஓட்டி வந்த பெண்ணையும் மிரட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் இரு கார்கள் மோதிய தகராறில் காரில் இருந்து கத்தியை எடுப்பது போல் மிரட்டல் விடுத்த கார் ஒட்டுநரின் வீடியோ வெளியாகியுள்ளது.

கோவை - திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் மேம்பாலத்தில் நேற்று காலை பெண் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்சி, அந்த பெண் சென்ற கார் மீது மோதியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு, வாடகை டாக்சி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு அந்த கார் ஓட்டுநர் கத்தியை எடுப்பது போல பாவனை செய்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த பெண், அதனை வீடியோவாக பதிவுசெய்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு கார் ஓட்டுநர் அந்த பெண்ணின் காரை சேதப்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர்: சு.குருசாமி, கோவை.

First published:

Tags: Coimbatore, Local News