முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / குதிரை மேல் நின்று 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த கோவை சிறுவன்..

குதிரை மேல் நின்று 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த கோவை சிறுவன்..

குதிரை மேல் நின்று சிலம்பம் சுற்றிய சிறுவன்

குதிரை மேல் நின்று சிலம்பம் சுற்றிய சிறுவன்

Coimbatore News : கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த தமிழ்வாணன் - உமாமகேஷ்வரி தம்பதி. இவர்களது 5 வயது மகன் ரோகன்குமார் எல்.கே.ஜி படித்து வருகிறார். ரோகன்குமார் 4 வயதில் இருந்தே சிலம்பம் கற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் குதிரை மேல் நின்றவாறு தொடர்ந்து  2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

இந்நிலையில், இன்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடத்தில் மீண்டும் குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து 2 மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய சிறுவனை பெற்றோர், உறவினர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர். இதனைத்தொடர்ந்து சிறுவன் ரோகன்குமார் செய்த சாதனைக்கான கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் அவர்களது மூத்த மகள் நித்தியாஶ்ரீ (13), 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் தொடர்ந்து 2 மணி நேரம் ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு உடல் உறுப்புகளின் படங்கள், விழிப்புணர்வு படங்கள் என 11 படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

செய்தியாளர் :  சுரேஷ் - கோவை

First published:

Tags: Coimbatore, Local News