ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

கோவை கார் வெடிப்பு: 6வது நபர் கைதில் பரபரப்பு திருப்பம்!

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

வெடிபொருட்களுக்கான வேதிப்பொருட்களை ஆன்லைனில் அப்சர்கான் வாங்கியதாக போலீசார் தகவல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore

  கோவை கார் வெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஜமேஷா முபீனின் உறவினர் அப்சர்கானை போலீசார் கைது செய்துள்ளனர்.

  கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிறு அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார்.

  இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சனிக்கிழமை இரவு  ஜமேசா முபீனுடன், 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள்  தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

  தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, ஜமேசா முபீனின் நண்பர்களான உக்கடம் கோட்டை மேடு ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை கைது செய்தது.

  இந்த நிலையில் வழக்கின் புதிய திருப்பமாக, ஜமேஷா முபீனின் உறவினர் அப்சர்கானை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில்,  அவர்  வெடிபொருட்களுக்கான வேதிப்பொருட்களை ஆன்லைனில் அப்சர்கான் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தொடர்ந்து கைது செய்யப்பட்ட அப்சர்கானிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore