முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையை உலுக்கிய கொலை.. சீன மாடல் துப்பாக்கி கிடைத்தது எப்படி..? விசாரணையில் இறங்கிய போலீஸ்..!

கோவையை உலுக்கிய கொலை.. சீன மாடல் துப்பாக்கி கிடைத்தது எப்படி..? விசாரணையில் இறங்கிய போலீஸ்..!

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

Coimbatore gun shot issue | சீன மாடல் துப்பாக்கியால் கோவையில் ஒருவரை சுட்டு கொன்ற கொலையாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட சீன மாடல் துப்பாக்கி கூலிப்படையினருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஆவாரம்பாளையத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சத்தியபாண்டி என்ற நபரை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். போலீசார் விசாரணையில் இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இருந்த முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது.

இதையும் படிங்க; திமுக ஆட்சியை அப்புறப்படுத்த திட்டமிடுகின்றனர்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக கூலிப்படையினர் நான்கு பேர் அரக்கோணம் மற்றும்  சென்னை நீதிமன்றங்களில்  சரணடைந்தனர். இவர்களில் சஞ்சய் ராஜா என்ற கூலிப்படை தலைவனை காவலில் எடுத்து தனிப்படை  போலீசார் விசாரித்தனர். அப்போது கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி சீன நாட்டு தயாரிப்பு என்பதும்,  அதை சென்னையில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சஞ்சய் ராஜாவை தனிப்படை போலீசார் சென்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் இருச்சக்கர வாகன நிறுத்ததில் நிறுத்தப்பட்ட வாகனத்தில்  2 சீன தயாரிப்பு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இவர்களில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்ட சஞ்சய் ராஜாவை கோவை அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணைக்காக கரட்டுமடம் பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்ப முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து, போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் சஞ்சய் ராஜாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இரு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது. கொலை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு இரு சக்கர வாகனத்திலேயே சஞ்சய் ராஜா கோவையில் இருந்து சென்னை சென்று இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில்  சீன நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீன மாடல்  துப்பாக்கியை இந்த கூலிப்படை கும்பல் வாங்கியது எப்படி என்பது குறித்தும்,  கள்ள சந்தையில் சீன நாட்டு ஆயுதங்கள் விற்கப்படுகின்றனவா என்பது குறித்தும் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சு.குருசாமி, கோவை.

First published:

Tags: Coimbatore, Crime News, Gun shot, Local News