ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. பாடம் திட்டம் திணிப்பா? கோவையில் பள்ளி மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்

9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. பாடம் திட்டம் திணிப்பா? கோவையில் பள்ளி மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

Coimbatore | தங்களுக்கும் மாணவியின் உயிரிழப்பிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore | Coimbatore | Tamil Nadu

  கோவையில் தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், குறுதொழில் செய்து வருகிறார். இவரது மகள் தடாகம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். 8ஆம் வகுப்பு வரை மெட்ரிக் பாடத் திட்டத்தில் படித்து வந்த இவர் பள்ளி நிர்வாகத்தின் வலியுறுத்தலால் தற்போது 9ஆம் வகுப்பிற்கு ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

  இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், விளையாட்டில் கூட ஈடுபட முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கூட, அவர்கள் ஐ.சி.எஸ். இ பாடத்திட்டத்தை படிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

  இதையும் படிங்க | சகோதரருக்கு வெளிநாட்டு வேலை வாங்கித்தரும் ஆசையில் 8.20 லட்சம் ரூபாய் இழந்த பெண்!

  இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தந்தை, உற்றார், உறவினர்கள் என பலரும் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  இதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகம் மாணவியின் மரணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம். நாங்கள் பாடத்திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தவில்லை. பாடத்திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம் என தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: ஜெரால்ட், கோவை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Coimbatore, Crime News, Death, Student Suicide, Suicide