முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / திருட்டுதான் தொழிலே.. கோவையில் குடும்பமே கூட்டு சேர்ந்து கொள்ளை - 5பேர் கைது

திருட்டுதான் தொழிலே.. கோவையில் குடும்பமே கூட்டு சேர்ந்து கொள்ளை - 5பேர் கைது

கோவை திருட்டு வழக்கு

கோவை திருட்டு வழக்கு

Coimbatore Crime News | கோவையில் ஒரே குடும்பத்தை 5 பேரும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகளை திருடி வந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் பல்வேறு இடங்களில் குடும்பமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டறியும்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.  இதன்பேரில் கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவை திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் குடும்பமாக சென்று திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனையடுத்து திருமலையாம்பாளையத்தை சேர்ந்த  திவாகர்(26), கண்ணையா (30),  பார்வதி(67) முத்தம்மா(23),  முத்துமாரி(26) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த 5 பேர் மீதும் கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது.  கைதானவர்களிடம் இருந்து சுமார்  40 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

இந்த புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட கோவை மாநகர காவல் உதவி ஆணையர் ரவிக்குமார், பி1 பஜார் காவல் நிலைய புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சின்னதுரை, பி2 ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, பி1 பஜார் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, உமா மற்றும் தலைமை காவலர்கள் கார்த்திக் பூபதி ஆகியோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் பாராட்டினார்.

செய்தியாளர்: ஜெரால்ட் (கோவை)

First published:

Tags: Coimbatore, Crime News, Local News, Tamil News