முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / குழந்தையின் மூச்சுக்குழாயை அடைத்த மிளகு.. அறுவை சிகிச்சை இல்லாமல் காப்பாற்றிய மருத்துவர்கள்.. குவியும் பாராட்டு..!

குழந்தையின் மூச்சுக்குழாயை அடைத்த மிளகு.. அறுவை சிகிச்சை இல்லாமல் காப்பாற்றிய மருத்துவர்கள்.. குவியும் பாராட்டு..!

குழந்தையின் மூச்சு குழாயில் அடைத்த மிளகு

குழந்தையின் மூச்சு குழாயில் அடைத்த மிளகு

Coimbatore 1year old Child Operation | குழந்தையின் மூச்சுக் குழாயில் சிறு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் விரைவாக செயல்பட்டு அகற்றினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை பகுதியை சேர்ந்த  சேர்ந்த பிறந்து 1 வயது 4 மாதங்களே ஆன  ஆண் குழந்தை திடீரென்று  மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக பெற்றோர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

அதில் மூச்சு குழாயில் சிறு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக உள் நோக்கி குழாய் பார்த்தபோது மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி  இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து அந்த குழந்தைக்கு மூச்சுக்குழாயில் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அந்த மிளகை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

தக்க சமயத்தில் அளித்த சிகிச்சையினால் குழந்தையின்  உயிர் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் பேராசிரியர் சுந்தரம் தலைமையில்  நடைபெற்ற இந்த உடனடி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நிர்மலா பாராட்டு தெரிவித்தார்.

செய்தியாளர்: ஜெரால்ட்

First published:

Tags: Coimbatore, Local News