Home /News /coimbatore /

ஃபேசியல் செய்த சிறுவன்.. வெந்து போன முகம் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஃபேசியல் செய்த சிறுவன்.. வெந்து போன முகம் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஃபேசியல் செய்த சிறுவன்..வெந்து போன முகம்.

ஃபேசியல் செய்த சிறுவன்..வெந்து போன முகம்.

Coimbatore | முகம் பளபளவென இருக்குமென நம்பி கண்ணை திறந்து பார்த்த சிறுவனுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. முகம் சிவப்பாக மாறாமல் வெந்து போய் இருந்தது..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
ஃபேசியல் செய்தால் கன்னம் ரெண்டும் தேஜஸ் ஆகி பன்னு மாதிரி ஆகிடும் என நம்பி  ஃபேசியல் செய்த சிறுவனுக்கு நடந்த சோக சம்பவம். சமீபக்காலத்தில் பெண்களை விட  அதிகமான ஆண்கள் தங்களை அலங்காரப்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் முக்கியமாக பள்ளி பயிலும் சிறுவர்களுக்கு அதன் மேலான நாட்டம் அதிகமாக இருக்கிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மென்ஸ் சலூன் என்ற பெயரில் சிகைஅலங்காரம் செய்யும் கடை நடத்தி வருபவர்  சஞ்சய்தாஸ். இவரது கடையில் வித்யாதரன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்தக் கடைக்கு 17 வயதான சிறுவன் ஒருவன் கடந்த 13 ம் தேதி ஃபேசியல் செய்வதற்காக வந்துள்ளார்.

ஃபேசியல் செய்வதற்கு ஸ்டீமிங் மிஷினில் முகத்தை வைத்த பொழுது, அதிக வெப்பத்துடன் வெளியான நீராவியால் சிறுவனின் முகத்தின் ஒரு பகுதி வெந்து போனது. முகம் பளபளவென இருக்குமென நம்பி கண்ணை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. முகம் சிவப்பாக மாறாமல் வெந்து போய் இருந்தது..

Read More : இது கதவா ? காரா?.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வைரல் வீடியோ.!


சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ் பின்னர் , சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.இதனையடுத்து 17 வயதான சிறுவனின் தந்தை விஜயகுமார் என்பவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் ,காயம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கடை உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர்  வித்யாதரன் ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர்  ஜாமினில் விடுவித்தனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Coimbatore, Fashion, Tamil News

அடுத்த செய்தி