Home /News /coimbatore /

தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

தென்னை விவசாயிகள்

தென்னை விவசாயிகள்

Coimbatore Coconut Farmers : கொப்பரை தேங்காய் கொள்முதல் கால அவகாசத்தை நீட்டித்து தருவதுடன், கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் - விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi | Coimbatore
    தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை விவசாய பிரிவு சார்பில் இன்று தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து தென்னை விவசாயிகள், கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்கள், விவசாய நிறுவனத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகரித்து வருகிறது. இதனால் தேங்காய் மகசூல் அதிகரித்து வருவதால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்திப்பதை தவிர்க்க தமிழக அரசு நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை


    கொப்பரை தேங்காய் கொள்முதல் கால அவகாசத்தை நீட்டித்து தருவதுடன், கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என‌ இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் : சக்திவேல் மலையாண்டி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coconut, Coimbatore

    அடுத்த செய்தி