Home /News /coimbatore /

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

Coimbatore | ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  அறிக்கையில் பல பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், சட்டமன்றத்தில் வெளிப்படையாக அதை வைத்து  விவாதித்து நிறைவேற்றுவோம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவையில் முன்னாள் அமைச்சர்  பொங்கலூர் பழனிச்சாமி  இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கோவை கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மகன் கௌசிக் தேவ்விற்கும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேத்தி ஸ்ரீநிதிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 1972 ம் ஆண்டு பொங்கலூர் பழனிச்சாமி திருமணத்தையும், 1999 ல் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ்பாரி  திருமணத்தையும் கருணாநிதி நடத்தி வைத்தார் எனவும், அவர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் நடத்தி இருப்பார் எனவும் தெரிவித்தார்.

பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் மதியழகன் ஆகியோரின் கட்சி செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இது ஒரு சீர்திருத்த திருமணமாக , சுயமரியாதை உணர்வோடு, தமிழ் திருமணமாக நடந்து இருக்கின்றது என்று தெரிவித்தார். இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967 முன்பு சட்ட உரிமையில்லை என தெரிவத்த அவர், அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் சீர்திருத்த திருமணத்தை சட்ட அங்கீகாரமாக்கி முறைப்படி செல்லுபடியாகும் என்று கொண்டு வந்தார் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி 6 வது முறையாக நடைபெற்று வருகிறது எனவும், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற வில்லை, 70 சதவீதம் நிறைவேற்றி இருக்கின்றோம் எனவும், மீதமுள்ள 30 சதவீதத்தையும் விரைவில்  நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் என தெரிவித்த முதல்வர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டோம் எனவும், ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம் என தெரிவித்த அவர் ஆட்சிக்கு வந்தவுடன்  இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பெறப்பட்ட மனுக்களில் உள்ள கோரிக்கைகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இதற்காக தனியாக கன்ட்ரோல் ரூம் வைத்து செயல்படுத்துகின்றோம் என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றேன் என கூறினார். கடந்த முறை டெலிபோன் மூலம்  கோரிக்கை நிறைவேற்றப்பட்ட ஒருவரிடம்  பேசிய போது, 10 வருடங்களாக நடக்காத வேலை 10 நாட்களில் முடிந்து விட்டதாக பூரிப்போடு தெரிவித்ததாக கூறினார்.

234 தொகுதி எம்.எல்.ஏ.களும் அவர்கள் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்டு இருப்பதாகவும் அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி ஓன்று இருக்கின்றது.திமுக ஆட்சி அமைத்தால் ஜெயலலிதா மரணம் குறித்து முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து  இருந்தோம் என தெரிவித்த அவர்,  கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் பல பிரச்சினைகள் இருக்கிறது எனவும், அதை இப்பொது சொல்ல மாட்டேன்,  சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து அதை நிறைவேற்றுவோம் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் .

இதே போல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது எனவும்,  அதையும் சட்டமன்றத்தில் வைத்து விவாதித்து முடிவு செய்ய இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.



தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார். ஆனால் பெண்களுக்கு இலவச பேருந்து, பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது என தெரிவித்தார். வரும் 5 ம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை தமிழகத்திற்கு அழைத்து இருக்கின்றோம். மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை துவக்கி வைக்கின்றார். அன்றைய தினமேஅரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டமும் துவங்கப்பட இருக்கின்றது என தெரிவித்தார்.

Also see... சீமான்,மணியரசன் போன்றோர் பாஜகவின் கைக்கூலிகள்

மேலும் இன்று வரும் போது கூட சிலர் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து கேட்டார்கள். பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் நிச்சயமாக, உறுதியாக  வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்த திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CM MK Stalin, Coimbatore, Women

அடுத்த செய்தி