Home /News /coimbatore /

கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. 3 நாட்கள் சுற்றுப்பயணம் - முழு விவரம்..

கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. 3 நாட்கள் சுற்றுப்பயணம் - முழு விவரம்..

கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவையில் மட்டும் 662.50கோடி மதிப்பில் புதிய திட்டங்களுகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது, 272.01 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பயணிகளை  துவக்கி வைத்தும், 588. 19 கோடி மதிப்பில் 107062 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகின்றார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கொங்கு மண்டலத்தை திமுக புறக்கணிக்கிறது என எதிர்க்கட்சிகள் ஒருபுறம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், 3 நாட்கள் கொங்கு மாவட்டங்களில் முகாமிட்டு நலத்திட்ட பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று இருந்தாலும்,  கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த அளவு திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை திமுக கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்து தமிழக முதல்வரின் சுற்றுபயண திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது். எதிர்கட்சியினரின் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் தங்கி இருந்து நலத்திட்ட பணிகளை முடுக்கி விடுவதுடன் , நலத்திட்ட உதவிகளையும் வழங்குகின்றார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 107062 பயனாளிளுகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்குகின்றார். தமிழகத்தில் இதுவரை ஓரே மேடையில் இவ்வளவு பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது கிடையாது எனவும், கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில்தான் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

கோவையில் நடைபெறும் விழாவில் 662.50கோடி மதிப்பில்  748 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 272.01 கோடி மதிப்பீட்டில் 229 முடிவுற்ற பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. 588. 19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 107062 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்  அதிமுக, அமமுக, பா.ஜ.க உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை திமுகவில் இணைக்கும் விழாவானது நடைபெறுகின்றது.

இதில் பல்வேறு  முக்கிய பிரபலங்கள் இணையலாம் என்பதால் அனைத்து கட்சியினர் மத்தியிலும் இந்த பொதுகூட்டம் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு யாரெல்லாம் திமுகவில் இணைய போகின்றனர் என்பதை  அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்று கவனித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் பா.ஜ.க பிரமாண்ட பொது கூட்டம் நடத்திய நிலையில் அதை விட பல மடங்கு கூட்டத்தை திரட்டும் வகையிலும் இந்த பொது கூட்டமானது திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து டாலர் சிட்டியான திருப்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொழில் முனைவோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகின்றார். ஏற்கனவே கடும் நெருக்கடியில் தொழில் முனைவோர் சிக்கி இருக்கும் நிலையில் முதல்வர் நேரடியாக தொழில் முனைவோருடனர் கலந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வது திருப்பூர் தொழில் முனைவோருக்கு ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்க படுகின்றது.

இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கோபி அருகே கள்ளிப்பாளையத்தில்  அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்து கட்சியினர் மத்தியில் பேசுகின்றார்.

இதனைதொடர்ந்து வெள்ளி கிழமை அவனாசி அத்திகடவு திட்ட பணிகளை கிரே நகர் பகுதியில் பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின் பின்னர் பெருந்துறை பகுதியில் நடத்தப்படும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றார். இதனைதொடர்ந்து மாலை கோவை வரும் முதல்வர் ஸ்டாலின் பி.எஸ்.ஜி கல்லூரியின் 75 வது ஆண்டு்விழா நிகழ்வில் கலந்து கொள்கின்றார்.

Also see... மதுரை:காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்;6 உணவகங்களுக்கு நோட்டீஸ் - உணவு பாதுகாப்பு துறை அதிரடி! 

பின்னர் இரவு விமானம் மூலம் சென்னை கிளம்புகின்றார். கொங்கு மண்டலத்தில் 3 நாட்கள் முகாமிடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை துவங்கி வைப்பதுடன்  எதிர் கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிப்பதுடன், கட்சியை கொங்கு மண்டலத்தில் வலிமை படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CM MK Stalin, Coimbatore

அடுத்த செய்தி