ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

10 ரூபாய் நாணயம் இருந்தா நீங்க சுடசுட பிரியாணி சாப்பிடலாம்.. விழிப்புணர்வுக்காக அதிரடி ஆஃபர் கொடுத்த பிரியாணி கடை

10 ரூபாய் நாணயம் இருந்தா நீங்க சுடசுட பிரியாணி சாப்பிடலாம்.. விழிப்புணர்வுக்காக அதிரடி ஆஃபர் கொடுத்த பிரியாணி கடை

பிரியாணி

பிரியாணி

Pollachi news | பொள்ளாச்சி பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் சுடசுட சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pollachi, India

  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம்  பல இடங்களில் புழக்கத்தில் இருந்தாலும் பத்து ரூபாய் நாணயத்தை மளிகை கடை, காய்கறி கடை அரசு மற்றும் தனியார் பஸ்களில் வாங்குவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நீதிமன்றம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளது. ஆனாலும் சில இடங்களில் 10-ரூபாய் நாணயங்களை வாங்குவதில் பொதுமக்களும் வியாபாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

  இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு மின்சார வாரிய அலுவலகம் எதிரே இன்று புதிதாக யாழ் பிரியாணி கடை திறக்கப்பட்டது. அந்த கடை திறப்பு விழாவை முன்னிட்டு 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டுவரும்  125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  இதனை அடுத்து பிரியாணி பிரியர்கள் கடை முன்பு ஏராளமானோர் திரண்டனர். அங்கு வந்து வரிசையில் 10 ரூபாய் நாணயங்களுடன் நின்ற 125 பேருக்கு சுடச்சுட ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 10 ரூபாய் நாணயத்தை அனைவரும் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரியாணி கடைக்காரை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி சென்றனர்.

  பொள்ளாச்சி: ம.சக்திவேல், பொள்ளாச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Biriyani, Pollachi