பொள்ளாச்சி அருகே உள்ள பில்சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக்கூலி வேலைக்கு செல்லும் பழனிச்சாமி - சரஸ்வதி தம்பதியினரின் மகன் காளிமுத்து (25), இவர் பில் சின்னாம்பாளையத்திலுள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். 2014 ம் ஆண்டு முதல் இலக்கியம் சார்ந்து படிக்க ஆரம்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காளிமுத்துவை கவிஞர் காளிமுத்துவாக பொள்ளாச்சி இலக்கிய வட்டம் அமைப்பு மாற்றியது.
காளிமுத்துவின் முதல் மேடையும், முதல் கவிதையும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்புதான் என காளிமுத்து நம்மிடையே உணர்ச்சி பொங்க கூறினார். மேலும் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சப்ரியா மற்றும் செயலாளர் இரா.பூபாலன், பொருளாளர் சோலைமாயவன் ஆகிய மூவரும் தன்னை எழுத்தாளனாக மாற்றியுள்ளனர் என்று கூறினார்.
கோவை மற்றும் பொள்ளாச்சி இலக்கிய அமைப்பும், கோவை இலக்கிய சந்திப்பு உள்ளிட்ட இலக்கிய தொடர்புகள் தன்னை உத்வேகத்துடனும், எழுதத்தூண்டியுள்ளது. தான் எழுதிய ''தனித்திருக்கும் அரளிகளின் மதியம் '' எனும் கவிதை தொகுப்புதான் முதல் கவிதை தொகுப்பு என கூறினார்.
இக்கவிதை தொகுப்பு உருவாவதற்கு கவிஞர் அம்சப்ரியாவும், பூபாலனும், பல உதவிகளை செய்துள்ளதாக கவிஞர் காளிமுத்து தெரிவித்தார். மேலும் சாகித்ய அகாடமியின் யுவபுரஷ்கர் விருது என்னை இன்னும் எழுத தூண்டுகிறது. புதிய புத்துணர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
Also see... புதிய பாலம் கட்டுமானத்தால் 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு...
மத்திய அரசின் சாகித்ய அகாடமி அமைப்பால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பபடும் '' யுவ புரஷ்கர் ''2022ம் ஆண்டிற்கான விருதை மத்திய அரசு எனக்கு அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளது என தெரிவித்தார்.
செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central govt, Coimbatore, Pollachi