ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பண்ணைக்குள் நுழைந்து கோழிகளை தூக்கிச் சென்ற சிறுத்தை : கோவை கணுவாய் பகுதியில் மக்கள் பீதி!

பண்ணைக்குள் நுழைந்து கோழிகளை தூக்கிச் சென்ற சிறுத்தை : கோவை கணுவாய் பகுதியில் மக்கள் பீதி!

சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி

சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி

Coimbatore Siruthai Cctv | வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ததுடன் அதனை கண்காணிக்கும் வகையில் மலை அடிவாரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கணுவாய் பகுதியில் இன்று அதிகாலை பண்ணைக்குள் நுழைந்து கோழியை சிறுத்தை கடித்து தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் கணுவாய்  பகுதியை சேர்ந்தவர் அஸ்வின். இவர் கணுவாய் யமுனா நகர் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.  கடந்த சில நாட்களாக கோழிப் பண்ணையில் இருந்து கோழிகள் அடிக்கடி காணாமல் போய் உள்ளது. இதனையடுத்து கோழிப் பண்ணையில் இருந்த் சிசிடிவி கேமரா காட்சிகளை அஸ்வின் பார்த்தபோது, அதிகாலை 4 மணி அளவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கும் இங்கும் உலாவியபடி பண்ணையில் இருந்த கோழியை தூக்கிச் சென்றது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ததுடன் அதனை கண்காணிக்கும் வகையில் மலை அடிவாரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர். கோழிப்பண்ணைக்கு வரும் நபர்கள் கோழிகளை திருடி செல்வதாக நினைத்திருந்த நிலையில், சிறுத்தை கோழிகளை தூக்கிச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News