Home /News /coimbatore /

ஆ.ராசாவிற்கு மிரட்டல் : பாஜக மாவட்ட தலைவர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

ஆ.ராசாவிற்கு மிரட்டல் : பாஜக மாவட்ட தலைவர் மீது பாய்ந்தது வன்கொடுமை தடுப்பு சட்டம்!

பாலாஜி உத்தம ராமசாமி

பாலாஜி உத்தம ராமசாமி

Coimbatore | கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை சட்டத்திலும் பீளமேடு போலீசார் கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவையில் கடந்த 18ம் தேதி பீளமேடு பகுதியில் நடந்த இந்து முன்னணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆ.ராசா குறித்தும், தந்தை பெரியார் குறித்தும், திமுக குறித்தும் இழிவாக பேசினார். இது குறித்து திமுக ஐடி விங் அமைப்பைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஆனந்தகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் கலகம் ஏற்படுத்துதல், அவதூறாக பேசுதல், வேண்டுமென்றே அவமதித்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இன்று பாலாஜி உத்தமராமசாமி தாக்கல் செய்திருந்த பெயில் மனு விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்னதாகவே இந்த வழக்கில் SC/ST வன்கொடுமை சட்டபிரிவையும் சேர்ப்பதாக கூறி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி 2 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற  நீதிபதி செந்தில் ராஜன் உத்திரவிட்டார்.

    Also see... 2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடக்கும்? - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!

    இதனிடையே திமுக வை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில், மனுவை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி செந்தில்ராஜன் அறிவுறுத்தினார். கோவை மாவட்ட பாஜக தலைவரான பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் பீளமேடு போலீசார்  வழக்கு பதிவு செய்து இருப்பது கட்சியினரிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: BJP, Coimbatore

    அடுத்த செய்தி