Home /News /coimbatore /

இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி பண மோசடி... இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி பண மோசடி... இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

பிரசன்ன சுவாமிகள்

பிரசன்ன சுவாமிகள்

Coimbatore district News : இடப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த தொழிலதிபரிடம் 25 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் தாலி சங்கிலி ஆகியவற்றை வாங்கி மோசடி செய்த இந்து மக்கள் கட்சி ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் உட்பட 4 பேர் மீது கோவை செல்வபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு செங்கல்பட்டில் இடம் உள்ளது. அந்த இடத்தில் நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகியுள்ளார்.

அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்த நில பிரச்சினையை சரி செய்து தருவதாக கூறி, கடந்த 2020 முதல் 25.59 லட்சம் பணம் வாங்கியுள்ளார். மேலும், மாங்கல்ய பூசை செய்தால் விரைவில் பிரச்சினை தீரும் என கூறியதால், தொழிலதிபர் கருப்பைய்யா தனது மனைவியின் 15 சவரன் தங்க நகையினையும் கொடுத்துள்ளார்.

பணம், நகைகள் வாங்கிய பின்னரும் நிலப்பிரச்சினையை தீர்த்து வைக்காமல் காலம் தாழ்த்திய நிலையில், இது குறித்து கருப்பையா  கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்து மக்கள் கட்சி ஜோதிடபிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, ஆர்.எஸ்.புரம் பகுதியை ஹரபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்கு பேர் மீதும் மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Must Read :  ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் ஆண்டிபட்டி பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி - மும்பை சென்று மோசடி நபரை கைது செய்த போலீஸ்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின்  அருகிலேயே , அக்கட்சியின் ஜோதிட பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் வசித்து வருவது குறிப்பிடதக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Case, Coimbatore, Hindu Makkal Katchi, Money Laundering

அடுத்த செய்தி