Home /News /coimbatore /

120அடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார்.. நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் பலியான சோகம்

120அடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார்.. நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் பலியான சோகம்

கிணற்றில் கார் பாய்ந்து விபத்து

கிணற்றில் கார் பாய்ந்து விபத்து

கிணறு இடுக்குகள் கொண்டதாக இருப்பதாலும், தண்ணீர் நிரம்பி உள்ளதாலும் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சவால் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    தொண்டாமுத்தூர் அருகே சாலையோரம் 120 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில், இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர், ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக ஆலந்துறை சென்றனர். அங்குள்ள விடுதியில் இரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அதிகாலை 3 மணியளவில் காரில் சொந்த ஊர் திரும்பினர். தொண்டாமுத்தூர் அருகே தெனமநல்லூர் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக உள்ள 120 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது.

    கிணற்றில் முழு அளவிற்கு தண்ணீர் இருந்த நிலையில், ரோஷன் என்பவர் உயிர் தப்பினார். ஆனால், எஞ்சிய மூன்று பேரும் காருடன் கிணற்று நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



    கிணறு இடுக்குகள் கொண்டதாக இருப்பதாலும், தண்ணீர் நிரம்பி உள்ளதாலும் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சவால் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து போராடிய தீயணைப்புத் துறையினர் ரவிகிருஷ்ணா என்ற இளைஞரை சடலமாக மீட்டனர். மேலும், ஆதர்ஷ் மற்றும் நந்தனன் ஆகிய இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Accident, Coimbatore

    அடுத்த செய்தி