ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கார் வெடிப்பு வழக்கு : முடிந்தது தனிப்படைகளின் பணி... அடுத்த நடவடிக்கை என்ன?

கார் வெடிப்பு வழக்கு : முடிந்தது தனிப்படைகளின் பணி... அடுத்த நடவடிக்கை என்ன?

 மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை மாநகர காவல்துறையில்  கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படைகளின் பணி முடிந்தது என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் டிரோன் இன்ஸ்டியூட்டில் காவலர்களுக்கு டிரோன் பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு நிகழ்வு குறித்து கேட்டறிந்தார். பின்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது," டிரோன் டெக்னாலஜியை பயன்படுத்தி குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது எனவும், கோவை காவல் துறையில் டிரோன் ஆப்ரேட் செய்யும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம் சட்டம் ஒழுங்கு, குற்றதடுப்பு பணிகளை செய்யவும், கண்காணிப்பை செய்யவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கோவை காவல் துறையில் ஏற்கனவே ஒரு டிரோன் பயன்பாட்டில் இருக்கிறது என்றும், வேறு வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது குறித்தும், கலகங்களை கட்டுப்படுத்தவும், இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும், இரவு நேரத்தில் நைட் விஷன் பொருத்தப்பட்ட டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் டிரோன்களை வருங்காலங்களில் பயன்படுத்த இருப்பதாகவும்" தெரிவித்தார்.

மேலும்,” கார் வெடிப்பு வழக்கில் NIA விசாரணை துவங்கி நடைபெற்று வருகின்றது எனவும்,  கோவை போலீசாரை பொறுத்த வரை கண்காணிப்பு, ஏற்கனவே  புலன்  விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் விசாரணை தொடந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கில் கோவை மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட தனிப்படைகளின் பணி முடிந்தது எனவும் தெரிவித்தார்.

Also see... கோவை கார் வெடிப்பு... ஜமீஷா முபீன் வீட்டில் ஐஎஸ் கொடியின் வடிவம் - சந்தேகத்திற்குரிய ஆவணத்தை கைப்பற்றிய காவல்துறை

அதே வேளையில் கோவை போலீசார் ஏற்கனவே சேகரித்த தகவல்கள், வழக்கமான கண்காணிப்பு ஏற்கனவே கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனியாக வழக்கமான கண்காணிப்பு  நடைபெறுகின்றது எனவும், பாதுகாப்பை  பொறுத்தவரை வெளி மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவை போலீசார் முக்கிய இடங்களில் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Car, Coimbatore, NIA