கோவை கொடிசியா அரங்கில் ஆறாவது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஏழாவது நாளான இன்று திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் உள்ள புத்தக அரங்குகளை மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.
ஒவ்வொரு புத்தக அரங்குகளாக சென்று அங்கு உள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்த மாணவ, மாணவியர் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை தேடித் தேடி வாங்கினர். வகுப்பு ஆசிரியர்கள் சில புத்தகங்கள் பற்றி வகுப்பறையில் சொல்லி கொடு்த்து இருப்பதாகவும், புத்தங்கள் பற்றி ஆசிரியர் சொல்லி இருக்கும் நிலையில் அந்த புத்தகங்களை தேடி வாங்கி இருப்பதாகவும் புத்தக கண்காட்சிக்கு வந்த மாணவிகள் தெரிவித்தனர். புத்தகங்களால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
புத்தக கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் இருந்ததாகவும், கண்காட்சியை சுற்றிப் பார்ப்பது ஜாலியாக இருந்ததாகவும் பிடித்தமான புத்தகங்களை வாங்கி இருப்பதாகவும் கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் தெரிவித்தனர். ஹிட்லர், பொன்னியின் செல்வன், பொது அறிவு என ஏராளமான புத்தகங்கள் இருந்ததாகவும் முதல் முறையாக புத்தக கண்காட்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். புத்தகங்கள் படிப்பதன் மூலம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
Also see... இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை கடத்திய வாலிபர் கைது
புத்தக கண்காட்சியில் உள்ள 280 அரங்குகளையும் மாணவர்கள் ஒவ்வொன்றாக சுற்றிப் பார்த்தனர். அதில் உள்ள புத்தகங்களை பற்றியும் தெரிந்து கொண்டனர். ஒரே நாளில் ஐந்தாயிரம் மாணவர்கள் கோவை புத்தக கண்காட்சிக்கு வந்த நிலையில் காலை முதலே கோவை புத்தக கண்காட்சி பரபரப்புடன் காணப்பட்டது.
மாணவர்களால் பெரிய அளவில் விற்பனை இல்லை என்றாலும், மாணவர்கள் மத்தியில் புத்தகங்கள் குறித்து ஒரு புரிதலை ஏற்படுத்த இந்த பயணம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Book Fair, Coimbatore