ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஆ.ராசாவுக்கு எதிராக கருப்பு கொடி- பாஜக மகளிர் அணியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது..

ஆ.ராசாவுக்கு எதிராக கருப்பு கொடி- பாஜக மகளிர் அணியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது..

பாஜக மகளிர் அணியினர் போராட்டம்

பாஜக மகளிர் அணியினர் போராட்டம்

திமுகவின் துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற பின்  கோவைக்கு வரும் ஆ.ராசாவை கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க திமுகவினரும், திராவிட இயக்கத்தினரும் வரவேற்க தி்ரண்டு இருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை காளப்பட்டி பகுதியில் திமுக  நீலகிரி எம்.பி ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி காட்ட திரண்ட பாஜக மகளிர் அணியினர் உட்பட அக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகின்றார். பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர்  நீலகிரி செல்வதாக அப்பகுதி பாஜகவினருக்கு தகவல் கிடைத்தது.  இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு கருப்பு கொடி காட்ட  பாஜகவினர் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் கூடினர்.

இதனையடுத்து அந்த பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பா.ஜ.க மகளிர் அணியினரும், அக்கட்சி தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நேரு நகர் பகுதியில்  கருப்புக் கொடி காட்ட திரண்டதுடன் , ஆ.ராசாவிற்கு எதிராக கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Also Read: கடம்பூர் ராஜூவா” அவர் யார் என்றே எனக்கு தெரியாது ! செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் வைத்த டிவிஸ்ட்!!

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மகளிர் அணியினர் உட்பட 50 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

First published:

Tags: A Raja, BJP, Coimbatore