ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

’இது சிலிண்டர் விபத்தா?’ - ஆணிகள், பால்ரஸ் குண்டுகளை காண்பித்து அண்ணாமலை அடுக்கிய கேள்விகள்!

’இது சிலிண்டர் விபத்தா?’ - ஆணிகள், பால்ரஸ் குண்டுகளை காண்பித்து அண்ணாமலை அடுக்கிய கேள்விகள்!

அண்ணாமலை

அண்ணாமலை

கோயில் பக்கத்தில் கார் வெடித்த இடத்தில்  கோழிக்குண்டு, ஆணி போன்றவை இருக்கின்றது. இதை செய்தவர்கள் நிச்சயமாக  சாதாரணமாக செய்யவில்லை என கூறிய அவர், பாக்கெட்டில் இருந்து அவற்றை எடுத்து காட்டினார. இது தற்கொலை தாக்குதல், இதை சிலிண்டர் விபத்து என்று சொல்ல முடியாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மாநில அரசு நன்றாக செயல்பட  வைக்க வேண்டும் என்பதற்குதான் அவர்களை நோக்கி கருத்துகள், கேள்விகள் முன் வைக்கப்படுகின்றது எனவும், காவல்துறையை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கார் வெடிப்பு நடந்த இடத்தை  பா.ஜ.க மாநில தலைவர்  அண்ணாமலை இன்று பார்வையிட்டார். பின்னர் கோயிலில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் பங்கேற்று பஜனை பாடல்கள் பாடினார்.

பின்னர் கோயில் முன்பு நடந்த கார் வெடிப்பு குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்த அவர், பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். கோயிலுக்குள் மத நல்லணக்கம், மத ஒற்றுமை இருக்க வேண்டும் என பஜனை பாடல் பாடப்பட்டது என தெரிவித்த அவர், 8 நாட்களாக இந்த சம்பவம் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றோம். இதை கடந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

1998 குண்டு வெடிப்பிற்கு  பின்பு கோவையில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை , என தெரிவித்த அவர் இது  தற்கொலை தாக்குதல் எனவும் தெரிவித்தார். காக்கும் கடவுள் காவல் துறை நண்பர்கள்தான் என தெரிவத்த அவர், இதன் துணை தாக்குதல் நடக்காமல் காவல் துறை தடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார். மாநகர காவல் துறை துணிந்து உள்ளே சென்று தடுத்து உள்ளனர் என தெரிவித்த அவர், மக்களை மதரீதியாக பிளவுபடுத்த முயற்சித்தாலும் ஒன்றாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மதத்தை வைத்து சூழ்ச்சியாடி ஒற்றுமை உணர்வை குலைக்க முயல்கின்றனர் என தெரிவித்த அவர்,பா.ஜ.க எந்த வித மத சாயத்தையும் கூட பூச வில்லை எனவும், சானதான தர்மத்தின் அடிப்படையே யாரையும் பிரித்து பார்க்க கூடாது என்பதுதான் எனவும் தெரிவித்தார்.

எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ,வன்முறையை கையில் எடுக்க கூடாது, அவர்களுக்கு யாரும் ஊக்கம் கொடுக்க கூடாது என தெரிவித்த அவர், மத குருமார்கள் அவர்களை வேண்டும் எனவும் தெரிவித்தார். இன்று முதல் அடுத்த கட்டத்திற்கு கோவை செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க  : ''அண்ணாமலை ஒரு கோமாளி அரசியல்வாதி''.. திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி விமர்சனம்!

மாநில அரசு நன்றாக செயல்பட  வைக்க வேண்டும் என்பதற்குதான் அவர்களை நோக்கி கருத்துகள், கேள்விகள் முன்  வைக்கப்படுகின்றதே தவிர , காவல்துறையை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது எனவும் தெரிவித்தார். யாருக்கும் எதிராக கருத்துகளை சொல்லவில்லை என தெரிவித்தார்.

கோயில் பக்கத்தில் கார் வெடித்த இடத்தில்  கோழிக்குண்டு, ஆணி போன்றவை இருக்கின்றது. இதை செய்தவர்கள் நிச்சயமாக  சாதாரணமாக செய்யவில்லை என கூறிய அவர், பாக்கெட்டில் இருந்து அவற்றை எடுத்து காட்டினார். உயிர்சேதம் ஏற்படுத்த வேண்டும் என்று செய்து இருக்கின்றனர் எனகூறிய அவர்,இந்த வழக்கு விசாரணையில் சில தவறுகள் நடந்து இருக்கின்றது. எதற்காக இதை சரி செய்த கூடாது  என்பதற்காக  கேள்விகள் எழும்பபடுகின்றது எனவும் தெரிவித்தார்.

டிஜிபி கொடுத்த அறிக்கைக்கு பதில் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர, 96 பேரை கண்காணிக்க ஜூன் 19 ம் தேதி அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் இதில் 89 வது நபராக மூபின் இருப்பதாகவும், காவல் துறைக்கு அறிக்கை கிடைத்தும் முறையாக கண்காணிக்கவில்லை எனவும் தெரிவித்தார். காவல் துறைக்குள் சரியான தொடர்புகள்  இல்லாத்தால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கின்றது எனவும், இது தற்கொலை தாக்குதல், இதை சிலிண்டர் விபத்து என்று சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார். சிலிண்டர் விபத்து என்று சொன்னால் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு இல்லமால் போகும். பொதுமக்களுக்கு சில தகவல்களை சொல்லியாக வேண்டும். இதுதான் நோக்கமே தவிர , குற்றவாளிகள் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி  வருகினறோம் எனவும் தெரிவித்தார். ஐஎஸ்ஐஎஸ் என்பதை இஸ்லாம் மத குருமார்களே எதிர்கின்றனர் என்று கூறிய அவர், இஸ்லாமிய மத குருமார்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு மனிதனை கண்காணிக்க சொல்லும் போது அதை சரியாக சரியாக செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட சிஸ்டமிக் பெயிலியர்தான் எனவும் கோவை மாநகரில் கடந்த செப்டம்பர் வரை உளவுத்துறை அதிகாரி இல்லை எனவும் தெரிவித்தார். மத்திய உளவு பிரிவு எந்த தகவல் கொடுத்தாலும்  களத்தல் அதை செய்ய வேண்டியது காவல் துறையினர்தான் எனவும், ஆகஸ்ட் மாதத்தில் ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்துவதற்காக வாய்ப்புகள் இருப்பது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். NIA ஒரு விசாரணை ஏஜென்ஸி அவர்கள் விசாரணை மட்டுமே நடத்துவார்கள் என தெரிவித்த அவர், சிலர் தவறு செய்து இருக்கின்றனர் என்பதற்காக இஸ்லாமியர்கள் மீது குற்றம் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்..! காவல்துறைக்கு தெரிவித்த தாய்

காவல்துறை தீவிரவாத தாக்குதல் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்கள் என தெரிவித்த அவர், ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை சொல்ல வில்லை, காவல்துறையில் முடிவெடுக்க வேண்டிய சில அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார். தீவிரவாதத்தை பொறுத்த வரை யாரும் சமாதானபடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாஜகவைச் சேர்ந்த மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். ஆனால் கோவையில் இன்று பந்த் போராட்டத்தை அறிவித்திருந்த, பாஜகவை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Lakshmanan G
First published:

Tags: Annamalai, BJP