Home /News /coimbatore /

கோவையில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றம்... கோபமடைந்த பாஜகவினர் சாலை மறியல்...

கோவையில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றம்... கோபமடைந்த பாஜகவினர் சாலை மறியல்...

 பாஜகவினர் சாலை மறியல். - கோவை

பாஜகவினர் சாலை மறியல். - கோவை

Coimbatore Annamalai | கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனர், கொடிகளை காவல்துறை அகற்றியது. இதனால் பேரூர் சாலையில் பாஜகவினர்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை கெம்பட்டி காலனியில் பாஜக சார்பில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு வாகனம் துவக்க  நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் பல இடங்களில் பாஜக கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது.  நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அண்ணாமலையை வரவேற்று கொடிகள், பேனர்கள் வைக்கப்பப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அவற்றை அகற்ற வலியுறுத்தினர்.

இதனால் பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையை கண்டித்து பாஜக வினர் பேரூர் சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see...ஓபிஎஸ் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இதனையடுத்து அவர்களிடம்  போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு தொடர்ந்து பா.ஜ.கவினர் மறியலை  கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Annamalai, BJP, Coimbatore

அடுத்த செய்தி