வடமாநிலத்தவருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டு விட்டு ,பிரச்சனை வந்த பின்னர் ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று சொன்னால் இதை உருவாக்கியதே நீங்கள் தான் , இதை சரி செய்ய வேண்டியதும் நீங்கள்தான் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்த திசா குழுவில் மக்கள் பிரச்சினையை பேச போதுமான நேரம் இல்லை எனவும், அதிகாரிகள் போதுமான தகவலோடு வரவில்லை எனவும் தெரிவித்தார்.இதை சேர்மேனிடம் சொல்லி இருக்கின்றோம், இந்த மீட்டிங் அடிக்கடி நடத்தபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வடமாநில தொழிலாளர் விவகாரம் ஜனவரியில் இருந்து நடக்கின்றது எனவும், இதில் மாநில அரசோ ,முதல்வரோ கருத்து தெரிவிக்காமல் இருந்து விட்டு,இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்த பின்னர் நடவடிக்கை எடுக்கின்றனர் என தெரிவித்தார். ஹோலி பண்டிகைக்கு நிறைய பேர் செல்கின்றனர். இது போன்ற வீடியோ பரவியதால் வீட்டிற்கு வர சொல்லி பேசுவதால் தொழிலாளர்கள் ஊருக்கு செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இப்போது முதல்வர் வாக்குறுதி கொடுத்து இருக்கின்றார்,ஆனால் அமைச்சர்களே இது போன்று பேசுகின்றனர் என தெரிவித்த அவர்,வடமாநிலத்தவர் தொடர்பான பிரச்சனையில் முதல்வர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என தெரிவித்தார்.
வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை ,திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிகளவு இருக்கின்றனர். இந்த பிரச்சினையால் டெக்ஸ்டைல் துறையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது எனவும்இந்த பிரச்சனையை சரியாக கையாளதால் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் வேலை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்த பகுதியை மாநில அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்துவதை போல, வடமாநில தொழிலாளர் பிரச்சினையாலும் பாதிக்கட்டும் என்ற தமிழக அரசு இருக்கின்றதா என்று சந்தேகம் இருக்கிறது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Also Read: “அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” - கடம்பூர் ராஜூ விமர்சனம்
முதலமைச்சருக்கு ஆட்சிக்கு ஆபத்து என்ற உணர்வு ஏற்பட்டால் அதற்கு மூல காரணம் யார் ? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது எனவும், தமிழக அமைச்சர்களே பானி பூரி குறித்தும், இந்தி பேசும் தொழிலாளர்கள் குறித்தும் விமர்சனங்கள் வைக்கின்றனர் எனவும், சிலர் இதற்கு வலுவான கருத்துக்களை சேர்த்து பரப்புகின்றனர் எனவும் வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டு விட்டு ,பிரச்சனை வந்த பின்னர் ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று சொன்னால் இதை உருவாக்கியது நீங்கள் தான் எனவும் தெரிவித்தார். இதை சரி செய்ய வேண்டியதும் முதல்வர்தான் என தெரிவித்த அவர், அடுத்தவர் மீது பழி போடும் முயற்சியை முதல்வர் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் முயற்சி செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், வடமாநிலத்தில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள் தான், அவர்கள் குறித்து அமைச்சர்கள் பேசுவதை வேடிக்கை பார்க்காமல் இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Coimbatore, DMK, Tamil News, Vanathi srinivasan