ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

ஜேபி நட்டாவின் பயண திட்டத்தில் மாற்றம்.. கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் தரிசனம் ரத்து!

ஜேபி நட்டாவின் பயண திட்டத்தில் மாற்றம்.. கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் தரிசனம் ரத்து!

ஜேபி நட்டா

ஜேபி நட்டா

கோவை வந்த ஜகாத் பிரகாஷ் நட்டாவை மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கோவை வருகை தாமதமானதால் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு தரிசனத்திற்காக செல்லும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் கோவை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முகவர்கள் மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவை வந்த ஜகாத் பிரகாஷ் நட்டாவை மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மூத்த உறுப்பினர் எச்.ராஜா ஆகியோர் வரவேற்றனர்.

சில தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்துக்குள்ளான உக்கடம் பகுதியில் அமைந்துள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயிலுக்கு பாஜக தலைவர் ஜேபி நட்டா சென்று வழிபாடு நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவை வந்தடைய தாமதமானதால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

First published:

Tags: BJP, Coimbatore, JP Nadda