கோவையில் இந்து முன்னணி கூட்டத்தில் திமுகவினர் குறித்தும், ஆ.ராசா குறித்தும் இழிவாக பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்துக்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையானது. இதனிடையே ஆ.ராசா பேசியதற்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை பீளமேடு பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவினர் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை குறித்தும் இழிவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் போலீஸ் காவல் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் காலை வைத்துப் பாருங்கள் என மிரட்டல் விடுக்கும் விதமாகவும், பெரியார் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார்.
இதனையடுத்து இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பீளமேடு போலீசார் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் அவர் மீது கலகத்தை தூண்டுதல், வேண்டுமென்றே ஒரு நபரை அவமதித்து எரிச்சல் ஊட்டுதல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாஜக மாவட்ட தலைவர் கைது செய்ததை அறிந்த கட்சி தொண்டர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க: ஆ.ராசா விவகாரம்.. திமுக குழப்பத்தில் உள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்
இதனையடுத்து இரும்பு தடுப்புகள் அமைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட உத்தம ராமசாமியை உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது காரை விடாமல் வழிமறித்து பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். பீளமேடு காவல் நிலையம் முன்பாக மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாலாஜி உத்தமராமசாமி சிவராம் நகர் பகுதியில் உள்ள நீதிபதி செந்தில்ராஜன் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்ராஜா, பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி வீட்டில் இருந்து வெளியில் வந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க மாவட்ட பாலாஜி உத்தம ராமசாமி இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் மாநில அரசின் அராஜக போக்கு எனவும் மதத்தை பற்றி கேவலமாக பேசிய அவர்கள் கட்சி எம்.பியை கண்டிக்க துப்பில்லை எனவும் தெரிவித்தார். நான் என்ன தவறாக பேசிட்டேன் என்பதை மாநில அரசு நிருபிக்க வேண்டும் என தெரிவித்த அவர், நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கின்றது எனவும், சட்டம் மீது நம்பிக்கை இருக்கிறது இதை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் தனது கருத்தில் இருந்து ஒரு சதவீதம் கூட பின்வாங்க மாட்டேன் எனவும், நான் சொன்னது உண்மை சத்தியம்,என் தாய்மார்களையும் சகோதரிகளையும் பழித்து பேசியது யாராக இருந்தாலும் விடமாட்டேன், இதில் இருந்து மாறமாட்டேன் என தெரிவித்தார். இதனையடுத்து பாலாஜி உத்தமராமசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A Raja, Annamalai, BJP, Coimbatore