ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

எம்.ஜி.ஆர், ராமர் கெட்டப்பில் அண்ணாமலை.. கோவையில் அனல்பறந்த பாஜக பேனர்கள்

எம்.ஜி.ஆர், ராமர் கெட்டப்பில் அண்ணாமலை.. கோவையில் அனல்பறந்த பாஜக பேனர்கள்

அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட பேனர்

அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட பேனர்

ராமராக அண்ணாமலை ஒரு கையில் துப்பாக்கியுடனும், மற்றொரு கையில் வில்லுடன் இருப்பது போன்ற புகைபடமும் போஸ்டர்களில் ஒட்டப்பட்டு இருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Annur, India

கோவை அன்னூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தலைவர்  அண்ணாமலையை எம்.ஜி.ஆர் ,  இராமர், அண்ணாமலை குப்புசாமி முதலமைச்சர் என விதவிதமாக அக்கட்சியினர் பேனர் வைத்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

கோவை மாவட்டம் அன்னூரில் விவசாய நிலங்களை எடுக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருப்பதை திரும்ப பெற வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக பா.ஜ.கவினர் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அன்னூர் நகரம் முழுவதும் பா.ஜ.க கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி... அமைச்சர் பிடிஆர் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி

நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்த அன்னூரில், ஒரு சில பேனர்கள் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது. தலைமை செயலகத்தின் முன்பு அண்ணாமலை  இருக்கும் படியான புகைபடத்தில் முதலமைச்சர் அண்ணாமலை குப்புசாமி என்று அச்சிடப்பட்டு இருந்தது. மற்றொரு பேனரில் ராமராக அண்ணாமலை ஒரு கையில் துப்பாக்கியுடனும், மற்றொரு கையில் வில்லுடன் இருப்பது போன்ற புகைபடமும் போஸ்டர்களில் ஒட்டப்பட்டு இருந்தது.

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் அண்ணாமலை

ராமர் கெட்டப்பில் அண்ணாமலை

அண்ணாமலையை முதல்வர் போன்று சித்தரித்து

மற்றொரு பேனரில் எங்கள் வீட்டுப்பிள்ளை அண்ணாமலை என எம்ஜிஆரை போல சித்தரித்தும், அதில் அவர் கையில் சாட்டையுடன் இருப்பது போன்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்த்து.  ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் பங்கு பெற்றிருந்த இந்த போராட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர் மற்றும் போஸ்டர்கள் பொது மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வண்ணமாக இருந்தது.

First published:

Tags: Annamalai, BJP cadre, Coimbatore, Lord Vishnu, MGR