கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஒன்றிணைத்து மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூர் செல்லும் சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடை செயல்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த டாஸ்மாக் மதுபான கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சில வருடங்களாக அப்பகுதியில் மதுபான கடை இல்லாத நிலையில், தற்போது மீண்டும் புதியதாக அதே இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் துவங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரசியல் கட்சியினர் பொது மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து சோமனூர் சாலையில் புதியதாக மதுக்கடை கொண்டு வருவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குழந்தைகள் நல மருத்துவமனை, பள்ளிகள், தேவாலயம் போன்றவை அமைந்துள்ள இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க கூடாது என ஆர்ப்பாடத்தின் போது அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
Must Read : தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் மனு
கோவை மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை எனவும் மதுகடை இங்கு அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மதுக்கடைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.