ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

அப்பார்ட்மெண்டில் அதிகாலையில் பற்றி எரிந்த பைக்குகள் - கோவையில் பரபரப்பு

அப்பார்ட்மெண்டில் அதிகாலையில் பற்றி எரிந்த பைக்குகள் - கோவையில் பரபரப்பு

கோவை தீ விபத்து

கோவை தீ விபத்து

Coimbatore News : அதிகாலை 4 மணி அளவில் நடந்த தீ விபத்து குறித்து தொடர்ந்து கோவில் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை விளாங்குறிச்சியில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது.  

கோவை  விளாங்குறிச்சியில் ஷீலா அப்பார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தின் போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இருசக்கர வாகனங்களில் 6 இரு சக்கர வாகனங்கள் இன்று அடுத்தடுத்து தீ பிடித்து  எரிந்துள்ளது. அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தா அல்லது தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து கோவில் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடையவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Also Read: தரம் பார்த்து ஆடுகளை திருடும் திருடன்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள் - சேலத்தில் பரபரப்பு

விசாரணையில் இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு  காரணமாக இந்த தீ  விபத்து ஏற்பட்டு பக்கத்தில் இருந்த வாகனங்களுக்கு பரவி  இருக்கலாம் என்பது தெரிய வந்தது. அதிகாலை 4 மணி அளவில் நடந்த தீ விபத்து குறித்து தொடர்ந்து கோவில் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Fire accident, Tamil News, Tamilnadu