Home /News /coimbatore /

துண்டிக்கப்பட்ட கை.. கிணற்றில் வீசப்பட்ட உடல் - அழகு நிலைய ஊழியர் கொடூர கொலை

துண்டிக்கப்பட்ட கை.. கிணற்றில் வீசப்பட்ட உடல் - அழகு நிலைய ஊழியர் கொடூர கொலை

அழகு நிலைய ஊழியர் கொலை

அழகு நிலைய ஊழியர் கொலை

Crime News: துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் உடலின் சில பாகங்கள் இருப்பது  கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thudiyalur, India
கோவையில்  அழகு நிலைய ஊழியர் பிரபுவின் துண்டிக்கப்பட்ட கை மீட்கப்பட்ட  வழக்கில்  அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

கோவையை அடுத்த  துடியலூர் வெள்ளகிணறு பகுதியில் கடந்த 15-ம் தேதி குப்பை தொட்டியில் இருந்து  ஆணின் இடது கை மட்டும் கண்டறியப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் குப்பை தொட்டியினை சுத்தம் செய்த போது கை மட்டும் கிடந்தது தெரியவந்தது.  இது தொடர்பாக கோவை  மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள்  அமைக்கப்பட்டு  விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் , காந்திபுரம் பகுதியில் ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த பிரபு என்பவர் காணாமல் போனதாக வந்த புகாரை விசாரித்தனர். அப்போது துண்டாக கிடைத்த கை பிரபுவினுடையது என்பதை கைரேகை நிபுணர்கள் மூலமாக தனிப்படையினர் கண்டறிந்தனர். கை மட்டும் கண்டறியப்பட்ட நிலையில் வேறு உடல் பாகங்கள் எங்காவது  கிடைக்கிறதா என துடியலூர் சுற்றுவட்டார  பகுதியில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

கிணற்றில் கிடந்த உடல் பாகங்கள்:

இந்நிலையில் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் உடலின் சில பாகங்கள் இருப்பது  கண்டறியப்பட்டது. இதனையடுத்து  தீயணைப்பு துறையினர் உதவியுடன் கயிறை கட்டி கிணற்றுக்குள் இறங்கி உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றபட்ட பாகங்கள் ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த உடல் பாகங்களை  மரபணு ஆய்வுக்காக அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முறையற்ற உறவு காரணமா:

கூடுதலாக உடல் பாகங்கள் கிடைத்து இருப்பதால் அழகு நிலைய ஊழியர் பிரபு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில்  உடலின் மீதி பாகங்கள் எங்கு இருக்கின்றது என்பது குறித்தும்,  எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபுவிற்கு ஒரு சில பெண்களுடன் முறையற்ற உறவு இருந்து வந்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இதன் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Crime News, Tamil News

அடுத்த செய்தி