Home /News /coimbatore /

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க தடை...

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க தடை...

குரங்கு அருவி

குரங்கு அருவி

Pollachi Monkey Falls | பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை என வனத்துறை அறிவித்துள்ளது.

    பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை கவர்கள் சக்தி எஸ்டேட் சுற்றுவட்டார பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவி அருவியில் காற்றாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் யாரும் அருவிக்கி செல்லாத வகையில் முகப்பு கதவுகள் மூடப்பட்டு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Also see... திண்டுக்கல்: 3 மணிநேரத்தில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை...

    இதனிடையே, அருவியில் இருந்த வரும் தண்ணீர் நேரடியாக ஆழியார் அணைக்கு செல்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஆழியார் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    மேலும் வால்பாறை சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் எந்நேரமும் மழை மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி சுற்றுலா பயணிகள் யாரும் சாலையில் நிற்க வேண்டாம் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்..

    செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Falls, Pollachi

    அடுத்த செய்தி