முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பாலியல் தவறுகள் நடந்தால் மாணவிகள் விழிப்புடன் காவல்துறையை அணுக வேண்டும்: பத்ரி நாராயணன் ஐபிஎஸ்

பாலியல் தவறுகள் நடந்தால் மாணவிகள் விழிப்புடன் காவல்துறையை அணுக வேண்டும்: பத்ரி நாராயணன் ஐபிஎஸ்

 கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஐபிஎஸ்

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஐபிஎஸ்

பாலியல் தவறுகள் நடந்தால் மாணவிகள் விழிப்புடன் காவல்துறையை அணுக வேண்டும் என்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஐபிஎஸ் மாணவிகளிடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாகவும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து விடுபடுவது குறித்து கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ”பள்ளிக்கூடம் பிராஜக்ட் ” என்ற தலைப்பில் பள்ளி கல்லூரி, ஆசிரியர்கள், மாணவிகளிடம் கலந்தாய்வு கூட்டங்கள் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் .

நேற்று பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணியாளர் பத்ரி நாராயணன் ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறையினர் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களில்  இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் தொடர்பாக  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்தினர்.

Also see... அரசின் உத்தரவை மீறி மூடப்பட்ட 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ்..!

அதன் பின்னர் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களுக்கு சந்தித்தார். அப்போது,” கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறித்து இதுவரை 50,000 மாணவிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாவதால் குற்றங்கள் குறையும் என சொல்ல முடியாது. விழிப்புணர்வாக இருந்தால் மட்டுமே பிரச்சினைகள் வெளியில் வரும் இதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.

கோவை மாவட்டத்தில்  கடந்தாண்டு மட்டும் 180 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்கள் குறைய தவறு நடப்பது குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

10 வயதுக்கு அதிகமான குழந்தைகள் சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை பார்பதால்  சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்குகிறார்கள். 10 வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் good touch (குட் டச்) bad touch (பேட் டச்) எது என்பதையும் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் safe approach (சேப் அப்ரோச்) unsafe approach (அன் சேப் அப்ரோச்) எது என்பதை புரிந்து கொண்டு விழிப்புடன் இருந்தால் பாலியல் தொல்லைகளில்  இருந்து தங்களை பாதுகாக்க முடியும். எனவே இது போன்ற தவறுகள் நடந்தால் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்” என கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்: ம.சக்திவேல்,பொள்ளாச்சி

First published:

Tags: Coimbatore, Police, Sexual harrasment