கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் வரும் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலூன் திருவிழா நடைபெறவுள்ள இடத்தை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இது குறித்து அமைச்சர் கூறுகையில், “தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் பொள்ளாச்சியில் முதல் முறையாக சர்வதேச பலூன் திருவிழா அடுத்த மாதம் 12ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மெக்சிகோவில் நடந்த பலூன் திருவிழாவில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறையின் பலூனும் கலந்து கொண்டுள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை. அடுத்த மாதம் நடக்கும் பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, வியட்நாம், ஸ்பெயின், அமெரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து பலூன்கள் கொண்டு வரப்படுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பலூன் திருவிழாவில் இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவிற்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பலரும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கூடுதலாக நிதி ஒதுக்கி சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுகிறது.
Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?
அந்த வகையில், பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருந்தால் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Festival, Local News, Pollachi